+91 99 42 11 53 99

கானான் தேசம் பயன்படுத்தும் இலந்தை இலை



ilanthai-ilai

இலந்தை என்பது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இயற்கையாகவும், சாகுபடியாகவும் வளரும் ஒரு பலன்தரும் மரமாகும். தோற்றத்தில் ஒரு செடி போல இருந்தாலும் இது ஒரு மர வகை தாவரம். அதன் பழம் இனிப்பு, புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். கோடை காலத்தில் கிடைக்கும் இலந்தை பழத்தை போலவே அதன் இலைக்கும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்து தரும் தன்மைகளும் உண்டு. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில், இலந்தை இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வட்ட வடிவமான இலந்தை இலைகள் பசுமையான வாசனையுடன், சிறு புளிப்புத் தன்மை கொண்டது. இதனை உலர்த்தி காய்ச்சி மருந்தாகவும், அப்படியே பச்சையாக சாறு வடித்து உட்கொள்ளவும், கட்டு போடவும் பயன்படுத்துகின்றனர்.

இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடல் சூடு அதிகரிப்பதால் தோலின் அடியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இலையை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது. இதன் வேர்ப்பட்டை பசியை தூண்டுகிறது. இலந்தைப்பழம் சளி நீக்கவும், மலமிளக்கவும் பயன்படுகிறது.

ஒரு கைப்பிடி இலந்தை இலைகளை, சிறிதளவு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து, சூப் போல கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து டீயாக குடிக்கலாம். அப்படி தொடர்ந்து குடித்துவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது.

இந்த ஆரோக்கியமான டீயை சீனர்களும், வடக்கு ஆப்பிரிக்க நாட்டு மக்களும், மத்திய கிழக்கு ஆசிய நாட்டு மக்களும் தொடர்ந்து காலம் காலமாக அருந்தி வருகின்றனர். மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேஷில் இலந்தை இலையை ஊறுகாயாக செய்து பயன்படுத்துகின்றனர்.

தமிழ் நாட்டில் கூட இலந்தை பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன்படுத்துகிறார்கள். இலந்தைப் பழம் ஜாம் வடிவத்திலும் நம் ஊர் கடைகளில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட பல தலைமுறைகள் கடந்து விற்கப்படும் ஒரு தின்பண்டம் இந்த இலந்தைப்பழ ஜாம் மிட்டாய்.

தமிழ் நாட்டில் கூட இலந்தை பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன்படுத்துகிறார்கள். இலந்தைப் பழம் ஜாம் வடிவத்திலும் நம் ஊர் கடைகளில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட பல தலைமுறைகள் கடந்து விற்கப்படும் ஒரு தின்பண்டம் இந்த இலந்தைப்பழ ஜாம் மிட்டாய்.

இலந்தை இலைகளுக்கு கிருமி நாசினித் தன்மை அதிகம் உண்டு. இதன் இலைகளை மென்று சாற்றை உட்கொள்ள, பல்வலி, ஈறுகள் பிரச்னை சரியாகும். இலைச்சாற்றை மஞ்சள் தூளுடன் சேர்த்து தோலில் தடவி குளித்து வர சொறி, சிரங்கு, சிவப்பு புண்கள் போன்ற தோல் பிரச்சனைகள் சரியாகும்.

இதே இலந்தை இலைகளை கஷாயமாக மூளைக்காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு கொடுக்கலாம் என்று பரவலாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் பழைய நூல்களிலோ, தற்போதைய நவீன கால ஆராய்ச்சி கட்டுரைகளிலோ இருக்கவில்லை. சித்தர் நூல்களில் இருப்பதை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services