கோபுரம்தாங்கி மூலிகையின் இலைகள் இரண்டிரண்டாக கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும், ஜோடி ஜோடியாக, கீழிருந்து மேலாக ஒரு அடுக்காக அமைத்திருப்பாதால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.
வேறு சிலரோ இடியை ஈர்த்து தனக்கு அருகில் இருக்கும் பெரிய கட்டிடங்களை காப்பாற்றுகிறது. மண்ணை இருக வைத்து கட்டிடங்களை காக்கிறது என்று கூறுகின்றனர். பெரிய பெரிய கோவில்கள் இருக்கும் இடத்தில் இதை பாத்தி கட்டி வளர்ப்பதால், இதற்கு கட்டிடங்களை காப்பாற்றுகிற பண்பு உள்ளதோ என்று நம்பத் தோன்றுகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள இடங்களில் இந்தச் செடியை அதிகம் வளர்த்தார்களாம் நமது சோழ மன்னர்கள்.
தமிழக மூலிகைச் செடிகளில் ஒன்றான இது குப்பைமேனியை போல எல்லா இடங்களிலும் வளராது என்பதால், இன்று இது அழிந்து வரும் இனமாகக் கருதப்படுகிறது. பாறை இடுக்குகளிலும், இடிந்த சுவர்களிலும், பரவலாக அனைத்து தமிழகக் கிராமங்களிலும் காணப்படுகிறது. இதன் விதைப்பை நீர் பட்டவுடன் வெடித்து பரவும் தன்மைக் கொண்டதாக இருக்கிறது.
மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து, உடல் தசை நரம்புகளை வலுவாக்கி, உடலின் ஆற்றல் சக்தியை அதிகரித்து, பலவகையான வியாதிகள் நம் உடலை அண்டாமல் காத்து, உடலின் இயக்கத்தை ஊக்கப்படுத்தி, மனித உடலுக்கு தேவையான எல்லா முக்கிய வேலைகளுக்கும் கோபுரம் தாங்கி மூலிகை பயன்படுகிறது.
சரும அரிப்பு, சருமத்தில் ஏற்படும் வெள்ளை நிற புழு வெட்டுக்கள், வெண்திட்டுக்கள் ஆகியவற்றுக்கு வாரம் இரண்டு முறையாவது இந்த கோபுரந்தாங்கி இலைகளை மை போல அரைத்துத் தடவி வந்தால் நிச்சயம் சருமப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.
கோபுரந்தாங்கி, சிறுகண்பீளை, யானை நெருஞ்சில் இவற்றை சமூலமாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து நிழலிலேயே உலர்த்தி எடுக்க வேண்டும். பின்பு அதேபோல் வெள்ளரிக்காய் விதைகளையும் காயவைத்து, இவை எல்லாவற்றையும் நன்றாக இடித்து வைத்துக் கொண்டு, இந்த பொடியை அரை லிட்டர் நீரில் சுட வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவில் நன்கு சுண்டியதும், அதை காலையும் இரவும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் பருகி வர, சிறுநீரக எரிச்சல், சூடு குணமாகி, சிறுநீர் நன்றாக வெளியேறும். கடுகடுப்பு நீங்கும்.
கோபுரந்தாங்கி குடிநீரை இரண்டு வாரங்கள் தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் யாவும் கரைந்து வெளியேறி விடும். கோபுரந்தாங்கி செம்பு போன்ற உலோகங்களையும், உப்புகளையும் கரைக்கும் ஆற்றல் மிக்கதால், சிறுநீரக கற்களை விரைவில் சிறு நீரகத்திலிருந்து வெளியேற்றி, சிறு நீரகத்தை காத்து, உடல் நலத்தை சீராக்கும்.
கோபுரந்தாங்கி இலைகள், கொட்டைக் கரந்தை இலைகள் ஆகிய இரண்டையும் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் போட்டு வேகவிடுங்கள். 100 மிலி அளவு வரும் வரை வற்றச் செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் 48 நாட்கள், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் தசைகள் யாவும் இறுகி, உடல் நலமாகும். ஆயினும், காய கற்பம் எனும் இந்த மருந்தை உட்கொள்ள, சில பத்திய முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என பெரியோர் குறிப்பிடுகின்றனர்.
Super. Works well for kidney cleaning.
© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services