+91 99 42 11 53 99

விஸ்வரூபமான வில்வத்தின் பயன்கள்



vilvam

சிவனின் அம்சமாக கருதப்படும் இந்த வில்வம் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது.

தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து தச வாயுக்களை கொண்டு இயங்கக்கூடியது மனித உடலாகும்.

பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான் உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும்.

வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். வில்வம் மனித உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நரம்புகளின் இரத்த அலைகளில் உருவாகும் ஏற்ற இறக்கங்களைச் சரிப்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் மேனியை அழகாகவும் இருக்கச் செய்கிறது.

பெண்களுக்கு வரும் மாத கால வயிற்று வலி நாளில் மூன்று நாள் முதல் ஐந்து நாள் வரை தினமும் காலையில் குளித்த பிறகு ஒரு சுண்டைக்காய் அளவு வில்வ வேர் பொடியை பாலில் கலந்து கொடுத்தால் மாதகால வயிற்று வலி நீங்கி "கரு" உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது.

பஞ்சபூத தெய்வ விருட்சங்கள் ஐந்து. இதில் வில்வம்தான் முதலிடம் பெறுகிறது. இதைச் சாப்பிட்டால் தான் நோய் தீரும் என்பதில்லை. இதன் நிழலில் வந்து ஐந்து நிமிடம் இருந்தாலே பிராண வாயுவைச் சமன் செய்யும். இதனால்தான் இவை கோவில்களில் வளர்க்கப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் "மா" என்பது வில்வத்தைக் குறிக்கும் மாமரத்தை அல்ல. இந்த "மா"வில் ஆயிரம் காய்க்கு ஒரு காயில்தான் விதை இருக்கும். உலகில் பல மரங்கள் சில வருடங்கள்தான் உயிருடன் இருக்கும். பிறகு பட்டுப்போய் விடும். ஆனால் வில்வமும் தாளிப்பனையும் ஆயிரம் வருடங்கள் உயிருடன் இருக்கும். இவைதான் கோவிலில் வைக்கப்படும். தாளிப்பனை குலைவிட ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது.

மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று.

பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

வில்வப் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும். வில்வ வேர் மற்றும் தண்டுப் பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும்.வில்வ வேர் பொடியை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு குறையும்.

வில்வ வேரைத் வெள்ளை நிறத்தில் துண்டில் வைத்து தலையணை போல் அதை தலைக்கு அடியில் வைத்து உறங்கினால் ஞாபக சக்தி பெருகும். அதேபோல் நம் முதுகின் அடியில் வைத்து படுத்து உறக்க முதுகு வலி குணமாகும். இந்த வில்வ வேரை எலும்பு சேதாரம் உள்ள இடங்களில் நீள வாக்கில் வைத்து கட்டி மூன்று மணி நேரம் கழித்து அவிழ்த்து வர அந்த எலும்பு வலி குணமாகும். இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும் இதை மாலையில் செய்ய வேண்டும். வில்வ வேரை நம் வீட்டின் வாசலில் கட்டி தொங்க விட கண் திருஷ்டிகள் நீங்கும் கெட்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி துணை நிற்கும்.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services