+91 99 42 11 53 99

கருமஞ்சளின் நன்மைகள்



karumanjal-benefits

மஞ்சள் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கருமஞ்சள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அது சார்ந்த மருத்துவ, ஆன்மீக முக்கியத்துவங்களும் தெரியாது. மஞ்சள் முழுவதும் மஞ்சளாக இருக்கும். ஆனால் கருமஞ்சள் இஞ்சி அல்லது கருணை கிழங்கு போன்ற தோன்றத்தில், உள்புறம் நீலநிறத்தில் இருக்கும்.

நன்றாக விளைந்த கருமஞ்சள், சற்று பெரியதாக உள்புறம் நீலநிறத்துடன், நீண்ட நாட்கள் தோல் சுருங்கிப் போகாமல் இருக்கும். ஆனால் நன்றாக விளையாத கருமஞ்சள் இஞ்சியை போல உள்புறம் லேசான நீலநிறம் மட்டுமே கொண்டிருக்கும். விரைவில் காய்ந்து சுருங்கிவிடும். பொதுவாக மேற்கு தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலை பகுதிகளில் விளையும் கருமஞ்சள் நல்ல தரமானதாக இருக்கிறது.

மஞ்சளை நாம் அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம் அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருள்கள் தான். அதிலும் Curcumin என்று அழைக்கப்படும், எண்ணெயில் கரையக்கூடிய வேதிப்பொருள் முக்கியமானதாகும். அந்த Curcumin தற்போது மஞ்சளை காட்டிலும் கருமஞ்சளில் அதிகம் இருப்பதாக நவீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மேலும் இந்த Curcumin மனித உடலில் ஆக்ஸிடேஷனால் நடக்கும் விரைவில் வயதாவதை தடுக்கிறது, புதிய செல்கள் உருவாக துணைபுரிகிறது, மூளை நரம்புகளை வலுப்படுத்துகிறது, கொழுப்பை உடைத்து வெளியேற்றுவதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இப்படி பல மருத்துவ பயன்கள் கருமஞ்சளில் இருக்கின்றன என்று நவீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இப்படியாக கருமஞ்சளின் மருத்துவப்பயன்கள் ஒருபக்கம் இருக்க, எண்ணற்ற ஆன்மீக பயன்களும் இதற்கு உண்டு. பொதுவாக அம்மன் கோவில்களில், தீயசக்தியை விரட்ட, பாதுகாப்பு, திருஷ்டி நீக்குதல் போன்றவை சார்ந்த பூஜைகள் மற்றும் யாகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கருங்காலி மற்றும் பச்சை கற்பூரத்தை போலவே கருமஞ்சளும் அதிக ஆகர்ஷண சக்தி கொண்டது. எனவே வீட்டில் பணம் செழிக்க கருமஞ்சளை வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பது வட மாநிலத்தவர்கள் இன்றும் பின்பற்றுகிற ஒரு பழக்கம்.

கருமஞ்சளை காயவைத்து, தூளாக்கி எண்ணெயோடு சேர்த்து சந்தணம் போல செய்து, நெற்றியில் வைத்துக்கொண்டால் அந்த நபருக்கு திருஷ்டி வராது என்பது நம்பிக்கை. இதன் மூலம் வீட்டிற்கு மட்டுமல்ல, வெளியில் இருந்து மனிதருக்கு வரும் திருஷ்டி, தீய பார்வைகளையும் விரட்டிவிட முடியும்.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services